Posts

Showing posts from April, 2015

குக்கர் பராமரிப்பு

Image
குக்கர் பராமரிப்பு இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான் . எரிபொருளும் சிக்கனமாகிறது , சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர் . குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும் , நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் . ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன் . சுகாதாரம் அவசியம் சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட் , விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும் . ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும் . குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள் . நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம் . குக்கரில் அடி பிடித்து விட்டாலோ , கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம் . ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும் . அதை லேசா

இன்டக்ஷன் ஸ்டவ்

Image
< சமையலறையில் இன்டக்ஷன் ஸ்டவ்வை நெரிசலாக வைத்துக் கொள்ளாமல் சற்று இட வசதியோடு வைத்துக் கொள்வது நல்லது . இந்த ஸ்டவ் அருகில் மிக்ஸி , கேஸ் அடுப்பு போன்றவற்றை வைக்க வேண்டாம் .   < இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகப்படுத்தி முடித்த பிறகு கீழே ஸ்டவ்வில் இருக்கும் சுவிட்சை மட்டும் முதலில் ஆஃப் செய்யவும் . ஸ்டவ் உட்பகுதி குளிர ஒரு சிறிய ஃபேன் இருக்கும் . அதைக் குளிரச் செய்து ஆஃப் ஆன பிறகு மேலே மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தால் ஸ்டவ் நீடித்து உழைக்கும் .   < இந்த எலெக்டிரிக் அடுப்பின் கீழ்புறம்தான் சிறிய காற்றாடி ( ஃபேன் ) உள்ளது . அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும் . அதில் தூசு அடையாமல் பழைய டூத் பிரஷ் கொண்டு அவ்வப்போது வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும் . இதனால் இந்த அடுப்பு நீண்ட காலம்     உழைக்கும் .   < இன்டக்ஷன் ஸ்டவ்வைச் சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டுக் கழுவக் கூடாது . ஸ்கரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக் கொண்டு அழுத்தாமல் லேசாக தேய்த்தால் சுத்தமாகிவிட