இன்டக்ஷன் ஸ்டவ்

< சமையலறையில் இன்டக்ஷன் ஸ்டவ்வை நெரிசலாக வைத்துக் கொள்ளாமல் சற்று இட வசதியோடு வைத்துக் கொள்வது நல்லது. இந்த ஸ்டவ் அருகில் மிக்ஸி, கேஸ் அடுப்பு போன்றவற்றை வைக்க வேண்டாம்.
 < இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகப்படுத்தி முடித்த பிறகு கீழே ஸ்டவ்வில் இருக்கும் சுவிட்சை மட்டும் முதலில் ஆஃப் செய்யவும். ஸ்டவ் உட்பகுதி குளிர ஒரு சிறிய ஃபேன் இருக்கும். அதைக் குளிரச் செய்து ஆஃப் ஆன பிறகு மேலே மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்தால் ஸ்டவ் நீடித்து உழைக்கும்.
 < இந்த எலெக்டிரிக் அடுப்பின் கீழ்புறம்தான் சிறிய காற்றாடி (ஃபேன்) உள்ளது. அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும். அதில் தூசு அடையாமல் பழைய டூத் பிரஷ் கொண்டு அவ்வப்போது வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் இந்த அடுப்பு நீண்ட காலம்  உழைக்கும்.
 < இன்டக்ஷன் ஸ்டவ்வைச் சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டுக் கழுவக் கூடாது. ஸ்கரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக் கொண்டு அழுத்தாமல் லேசாக தேய்த்தால் சுத்தமாகிவிடும். பிறகு காய்ந்த துணி கொண்டு துடைத்து விட்டு மீண்டும் அலசிவிட்டு திரும்பவும் துடைத்து விட்டால் ஸ்டவ் பளிச்சென்று ஆகிவிடும்.
< இந்த ஸ்டவ்வைப் பயன்படுத்தி சமையல் வேலை செய்யும் போது பாலோ, சாம்பாரோ பொங்கி வழிந்து விட்டால் உடனே தண்ணீர் கொண்டு கழுவுவதைத் தவிர்க்கவும். டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து விட்டாலே போதுமானது.
 < இந்த ஸ்டவ்வுக்கு முறையான மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் மின் இணைப்புகளுடன் சேர்த்து இன்டக்ஷன் ஸ்டவ் மின் இணைப்பை பயன்படுத்தாதீர்கள்.
 < இந்த அடுப்பை "ஆன்' செய்தவுடன் பொதுவாக ஒரு டெம்ப்ரேச்சர் (Temperature) ஒளிரும். அதனை அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. என்ன உணவுப்பொருள் சமைக்கப் போகிறோமோ? அதற்குரிய பட்டனை உபயோகப்படுத்தி சமைக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
 < குக்கருக்கான காஸ்கெட்டை அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும். "காஸ்கட்' பழசாகிவிட்டால் விசில் வருவதற்குள் நான்கு புறமும் தண்ணீர் நிறைய கொட்டி இருக்கும். அந்த தண்ணீர் அடுப்பினுள் சென்று இந்த அடுப்பினுள் இருக்கும் காயிலை பழுதாக்கிவிடும்.
 < அதுபோல் இன்டக்ஷன் ஸ்டவ்வின் உபயோகம் முடிந்த பின் உடனடியாக மெயின் ஸ்விட்சை அணைக்கக்கூடாது. அடுப்பில் உள்ள ஸ்விட்சை அனைத்துவிட்ட போதும் கீழே உள்ள காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும். காயில் சூடு குறைவதற்கு காற்றாடி உதவுகிறது. எனவே அது சுற்றி தானாகவே நின்ற பின் அடுப்பிலிருந்து வரும் சத்தமும் நின்றுவிடும். அதன் பிறகுதான் மெயின் ஸ்விட்சை அணைக்க வேண்டும்.
 < இன்டக்ஷன் ஸ்டவ் உபயோகம் முடிந்தபின் அதன் மீது தேவையில்லாமல் பாத்திரங்களை வைப்பதைத் தவிர்க்கவும்.
 < நீங்கள் வாங்கிய இன்டக்ஷன் ஸ்டவ் சரியாக இயங்கவில்லை என்றால் உடன் கம்பெனி மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்யவும்.

 < இந்த ஸ்டவ்வை பயன்படுத்தும் போது சமையலறையில் வீட்டிலுள்ள குழந்தைகள் வருவதை தவிர்க்கவும்.

Comments

Popular posts from this blog

சுஜாத்தா நாவல்கள் - E BOOKS - FREE DOWNLOAD - LINKS

Tamil Fonts