தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டார். அதில், "அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நான் 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.

எங்களது தேர்தல் அறிக்கையில் ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6 மாத கால மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்தார்.

Comments

Popular posts from this blog

சுஜாத்தா நாவல்கள் - E BOOKS - FREE DOWNLOAD - LINKS

TAMIL E BOOKS - LINKS